தாவரவியல் பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தில் காணப்படும் வலசைபறவைகளை எவ்வாறான முறையில் பாதுகாப்பது, வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்திறங்கும் நீர்நிலைகளை மக்கள் நடமாட்டமில்லாதவாறு பாதுகாத்தல், பறவைகள் தங்கும் இடங்களில் காணிகள் அபகரிப்பை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழு ஒன்றை அமைத்து, அதனை செயற்படுவதாகவும், அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் விலங்கியல்துறை விரிவுரையாளர் ரகுபதி, துறைசார் விரிவுரையாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டு, தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர்.