1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு நகர சபை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.