வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வளமான ஆரம்பம் ஒன்றை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை எதிர்பார்க்க முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
“வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளதுடன் இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
குறுகிய காலத்தில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.
ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.
அரசாங்கம் பதவியேற்று 03 மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்