இதனை கட்டுப்படுத்த இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு குறித்த கட்சியைத் தடை செய்ததோடு அக் கட்சியின் தலைவர் சாத் உசேன் ரிஸ்வியையும் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்து பின்னர் விடுதலை செய்தது.
இதனையடுத்து அரசின் இந் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக குறித்த அமைப்பினர் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு இன் போது பல வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
இவ் வன்முறைச் சம்பவங்களால் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கான டி.எல்.பி ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக பஞ்சாப் மாகாணம் முழுவதும் டி.எல்.பி.யின் ஆதரவாளர்களால் பொலிஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு சில பொலிஸார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.