பாகிஸ்தான் ஜனநாயக முன்னணி எனப்படும் 11 பிரதான எதிர்க்கட்சிகளின் குறித்த கூட்டணியொன்றானது இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் இது ஆரம்பிக்கப்பட்டது முதல் பாரிய பேரணிகளை நடத்துகின்றது.
இக்கூட்டணியானது பிரதமர் இம்ரான் கானின் விலகலை எதிர்ர்பார்ப்பதுடன், அரசியலில் தலையிடுவதை நிறுத்துமாறு இராணுவத்துக்கு அழுத்தம் வழங்குகின்றது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான நேரம் முடிவடைந்து விட்டது என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் மகனான எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கான் அல்லது இராணுவத்துடன் புதிய தேர்தல்கள் அறிவிக்கும் வரையில் எந்தவொரு கலந்துரையாடலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை பிலாவல் பூட்டோ நிராகரித்துள்ளார்.
மோசடியான கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலொன்றின் மூலம் இராணுவத்தால் பிரதமர் இம்ரான் கான் நியமிக்கப்பட்டதாக எதிரணி தெரிவிக்கின்றது.