- எந்த Stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3C உம் 3S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்.
- Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட
3C உம் 3S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும். - Maths கற்பதாயின் 3C, 3S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்.
- Commerce கற்பதாயின் 3C, 3S உடன் அந்த C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணிதம் அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்.
- Arts கற்பதாயின் 3C, 3S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் Pass பண்ணி 2C 4S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும். எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இடாப்பில் பெயரினை எழுதி A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்.
3C, 3S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3C, 3S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில்
W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது. தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான இடாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/L பரீட்சையில் pass பண்ணி Results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே Pending இடாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய இடாப்பில் எழுத வேண்டும்.
இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம்மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
இம் மாணவன் கணித பாடத்தில் S எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை.
W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது
A/L விண்ணப்பம் செய்கின்றபோது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம். - O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது
- பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.
அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்றபோது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம்
O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.
என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.
தொழில் நுட்பப் பிரிவில் (Technology stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை.
ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்.
இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம்மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது.
Note:-
ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது.
Naasik Majeed