என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்!
- முதலில் விழிப்புணர்வுப் பிரச்சாரம். அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வழிகாட்டுதலைச் சொல்லி இருக்கிறார்கள்… நீங்கள் கோபப் படும் தொலைபேசி முன்னுரைப் பேச்சு உட்பட!
- கவனமாக மாகாணங்களை இணைக்கும் வகையில் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும், நாங்கள் என்ன செய்வோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
- மருத்துவமனைகளில் இடம் போதாவிட்டால் உபயோகிக்காத வற்றிகொலோ கெம்பஸ் போன்ற தணியார் மற்றும் அரச வளாகங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்கான வசதிகளை உண்டாக்கி உள்ளனர்.
- பொது இடங்கள், சூப்பர் மார்க்கற், பள்ளி, பல்கலைக்கழகம் , திரை அரங்கம், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களை விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.
- விமான நிலையங்களில் ஆரம்பத்தில் குறைந்தளவிலான கட்டுப்பாடுகள் இருந்தாலும் இப்போது மிக அதிக கவனம் செலுத்தி உள்ளனர்…
- தனியார் தொழில் நிறுவனங்களை மூடச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். பலரும் அதை பின்பற்றி உள்ளனர்.
- வணிகப் பதுக்கல்கள் இன்றி மக்களுக்கு பொருட்கள் கிடைக்க வழி வகுத்துள்ளனர்.
- மக்கள் ஜனநாயக அரசு என்று முழங்கிய பிரித்தானியா, அமேரிக்கா கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலைமை!…. ஆனால் இலங்கை அவர்களைப் போலப் பலம் பொருந்திய நாடாக இல்லாத போதும் கொறோனா பிரச்சனை மிகத் திறமையாகக் கையாளப்படுகிறது!
- குறை மட்டுமே கூறி வரும் எதிர்கட்சிகள் வாயடைத்து நிற்பது தெரிகிறது. அவர்களை பேச முடியாமல் செய்து காட்டி விட்டார் கோட்டாபாய ராஜபக்ச.
- மருத்துவத் துறையையும், இராணுவத்தினரும் பாராட்டியே தீர வேண்டும்… அவர்கள் இன்றி இது சாத்தியமில்லை!…
நீங்கள் ஆளும் இந்த அரசுக்கு ஆதரவாளர்களாயினும் எதிரானவர்கள் என்றாலும் கூட மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…..
இந்த அரசு செய்த பணியை ஒரு மனிதனாக பாராட்ட வேண்டாமா?