இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, புதன்கிழமை (18) பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.