எமது *இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் (MK)* கட்சியின் சார்பாக AIPSO நடத்துகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்களது முழு ஆதரவையும், தங்களது முயற்சிக்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய நாட்டில் கம்யூனிச இயக்கத்தினை வளர்த்தெடுத்த மதிப்புமிக்க தோழர்கள் எஸ் ஏ டாங்கே, மொகித் சென், மக்கள் தலைவர் தோழர் M.கல்யாணசுந்தரம்* ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் *இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமைக்காக* தொடர்ந்து பாடுபட்டு வரும் எமது இயக்கம் தங்களது முயற்சியை பெரிதும் பாராட்டுகிறது.
நாங்கள் பிற இடதுசாரி கட்சிகளால் அழைக்கப்பட்டாலும் சரி, அல்லது அவமதிக்கப்பட்டாலும் சரி உற்சாகத்துள்ளல் போடுவதோ, அல்லது மனம் சோர்ந்து போவதோ கிடையாது. எங்களது இயக்கத்தை பொறுத்தவரை, எமது நோக்கமானது சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரி இயக்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் இடையே ஒற்றுமையை பலப்படுத்துவதன் முலம், ஏகாதிபத்திய மற்றும் மதவெறி சக்திகளின் முதுகெலும்பை முறித்து, உலகெங்கும் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவதேயாகும்.
ஈழத் தமிழ் போராளிகள் இயக்கத்தினரிடையே செம்மலராக தோன்றி, *பாசிச LTTE* தலைமையால் 1990 ஜுலை 19ம் தேதியன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்ட *EPRLFன் செயலாளர் நாயகம் *தோழர் பத்மநாபா* அவர்கள் அடிக்கடி கூறும் வாசகம் இது: *ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக நாம் தீவிரமாக உழைக்கும் பொழுது, சில நேரங்களில் நாம் நமது சக இயக்கத்தவராலோ, அல்லது நாம் யாருக்காக போராடுகின்றோமோ அந்த மக்களாலேயோ கூட அவமானப் படுத்தப்படலாம்.
ஆனால் உண்மையில் அவமானப் படுத்தப்படுவது நாம் அல்ல. இதனால் பாதிப்பு நமக்கல்ல, நம் சக இயக்கத்தவருக்கே என்பதை அவர்களுக்கு காலம் உணர்த்தும். ஆகவே இத்தகையக் காரணங்களால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது. மக்களுக்கான பணியில் நாம் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். *தோழர் பத்மநாபா* அவர்களின் சிந்தனைகளை போற்றி நடக்கும் நாங்கள் சோர்வின்றி அயர்வின்றி உழைக்கும் மக்களின் மேன்மைக்காகவும், பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாகவும், உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் AIPSO அமைப்பின் அனைத்து விதமான செயல்பாட்டிற்கும் எமது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்-MK- கட்சியின் சார்பில் முழு ஆதரவினை வழங்குவோம். ஏ
னென்றால் AIPSO வின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் *தோழர் ரொமேஷ் சந்திரா* காலத்திலிருந்தே எங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை பெருமிதத்துடன் இச்சமயத்தில் நினைவு கூறுகின்றேன்.பி.கு:இக்கூட்டத்தில் உரையாற்ற விருப்பவர்கள் CPI, CPM, காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தீவிர LTTE ஆதரவாளர்கள்.