நீர்மூழ்கியின் பகுதிகளுடன், தொழும் விரிப்புகள் உள்ளடங்கலான சிதைவுகள், நீர்மூழ்கி காணாமல் போனதற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக, இந்தோனேஷியக் கடற்படையின் பணியாட் தொகுதியின் தலைவர் யுடோ மர்கொனோ தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கி தப்பியிருக்கக் கூடியதைத் தாண்டி 850 மீற்றர் ஆழத்தில் நீர்மூழ்கியை ஸ்கானொன்று கண்டுபிடித்துள்ளது.
நீர்மூழ்கி நல்ல நிலையில் இருந்ததாக இந்தோனேஷியக் கடற்படை தெரிவித்தபோதும், நீர்மூழ்கி மூழ்கிய இடத்தில் காணப்பட்ட எண்ணெய்ப் படிவு காரணமாக, எண்ணெய்த் தாங்கி சேதமடைந்திருக்கலாமெனக் கருதப்படுகிறது.