உலகின் பெரும்பாலான நாடுகள் இனப்பெருக்க உரிமைகள், பிரசவத்தின் போதான தாய் இறப்பு விகிதம், பால்ய திருமணங்கள், கல்வி மறுக்கப்படுதல் போன்ற விடயங்களில் இன்னும் பின்வாங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
அன்டோனியோ ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளை பெயரிட்டு , அங்கு பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்பட்டதாகக் கூறினார்
தசாப்தங்கள் கடந்த ஆணாதிக்க , பாகுபாடுகள் நிறைந்திருந்த உலகமானது விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தில் பெரும் பாலின இடைவெளியை உருவாக்கியுள்ளது. சர்வதேச கட்டமைப்புகள் பெண்களுக்காக உழைப்பதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என அவர் தெரிவித்தார்