பால்மா, யோகட்களின் வற் வரி நீக்கப்படும்

பாராளுமன்றில் இன்று (18) விசேட உரையொன்றை நிகழ்த்தி இதனைக் குறிப்பிட்டார்.  மேலும், கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி வரி 30 சதவீதமாகக் காணப்பட்டது.  அதனை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் 15 சதவீதமாகக் குறைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதே சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மதிப்பாய்வின் போது இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.