தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளுக்குப் பின்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இந்நெருக்கடி நிலைமையினை சாதகமாக்கிக்கொண்டு சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.