பிரதமரின் மகளிர் தின செய்தி- பிரதமர் ஹரிணி

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் போன்றவை பெண்களைப் பொருத்தமற்ற வகையில் பாதிக்கின்றன. 
 
இலங்கை பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஜனநாயக சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில், எமது சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினரான பெண்களை நாம் தள்ளிவைக்க முடியாது. 
 
இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள் மற்றும் தலைமைத்துவம் அவசியமாகும். 
 
சர்வதேச பெண்கள் தினத்தில், வெறுமனே வார்த்தைகளில் மாத்திரமின்றி, பாலின உணர்வுள்ள கொள்கைகள் மற்றும் பாதீட்டு திட்டங்கள் மூலம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உறுதிபூணுவோம். 
 
பெண்களின் வாழ்வு செழிப்புறும்போது, சமூகங்கள் செழிப்புற்று விழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply