எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும்.
தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இது தொடர வாய்ப்புள்ளதாக அறிய கிடைக்கின்றது.
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதியாக இடைக்கால அரசாங்கத்தில் இணைவது குறித்து பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். பொன்சேகா போன்ற எம்.பி.க்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.