ரொறன்ரோவில் தேடகம் எரிப்பு, தாயகம் தடை, கடைக் கண்ணாடி உடைப்பு, கார் டயர் கிழிப்பு என்று புலிக் காடையர்களின் அட்டகாசங்கள் எல்லாம், ‘ஊருக்கு வா, கவனிக்கிறம்’ என்ற மிரட்டலோடு நடந்தவை.
இங்கே மாற்றுக் கருத்தினரின் கூட்டங்கள் வந்தால் ஆஜராகும் உலகத்தமிழ்த் தொண்டரடிதடிப்பொடிகளுக்கு என்றுமே குறைச்சல் இருந்ததில்லை. வேள்விக்கு வளர்ந்த கடாக்கள் போல, குறுந்தாடிகளுடன் இந்த மாவீரர்கள் பெரும் அரியண்டமாகவே இருந்தார்கள்.
இந்தக் கும்பலுக்கு மூளைக்குள் எந்தச் சரக்கும் இல்லை என்பதை ‘கட்டாய குழந்தைப் போராளிகளின் ஆட்சேர்ப்பு’ பற்றிய மனிதஉரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்ட போது ஆடிய ஆட்டத்தின் போது எந்த சந்தேகமும் இன்றி முடிவுக்கு வர முடிந்தது.
கனடிய அரசியலின் பெருந் தலைவரான பொப் ரேயைப் பேசவிடாமல் கூச்சலிட்டுக் குழப்பியவர்களில் முக்கியமானவரான கரி ஆனந்தசங்கரி அதே லிபரல் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் என்பது மகா முரண்நகை.
இந்தக் கும்பலின் குரங்குச் சேட்டைகள் தான் கனடாவில் புலிகள் மீதான தடைக்கான கடைசி ஆணியாக அமைந்தது.
கடைசியாக இந்த அடியாட்களைக் கண்டது, புலிகளால் கொல்லப்பட்ட மகேஸ்வரிக்கான அஞ்சலிக் கூட்டத்திற்கு வருவோரை எச்சரிப்பது போல வேவு பார்க்க வந்த ஒரு சில அடிதடிகள்!
அதன் பின்னர் இந்தக் கூட்டத்தை நான் கண்டதில்லை.
பின்னர் Demons in paradise திரையிடலின் போது கூச்சலிட்டு குழப்பியதாக அறிந்தேன்.
‘அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்’ என்ற கட்டுரையில், ‘தனது கருத்துக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்க முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கிக்குப் பயந்து எங்கள் பேச்சுரிமையை இழந்து வாய் மூடி மெளனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்’ என்று எழுதியிருந்தேன்.
இன்றைக்கும் இந்த உதிரிகள் ஆங்காங்கே எங்கள் கருத்துரிமையை மறுக்கும் தங்கள் சேஷ்டைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியது…
இவர்கள் பெற விளையும் பதினைந்து நிமிடப் புகழை இவர்கள் அடைய விட வேண்டியது தான்.
அவர்களின் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு, அவர்களின் கோடை கால நல்லூர் கொடியேற்றக் கனவில் மண் போடுவது தான் தற்போதைக்கு வேலை செய்யக் கூடிய பதில் தாக்குதல்!