இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “பிரிக்ஸ் அமைப்பின் 2024ஆம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷ்யா, கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி வெளியிட்ட செய்தியில், 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் வகையில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்து நாட்டுடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும், இன்று (1) முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகியுள்ளன.
பிரிக்ஸ் அமைப்பானது நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2006ஆம் ஆண்டு ரஷ்யாவால் நிறுவப்பட்டது. இதில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
சுழற்சி முறையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி ரஷ்யா இதன் தலைமையை ஏற்றது. 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமைப்பின் உறுப்பினராக அதிகாரப்பூர்வ முறையில் இணைந்தன.