கொரோனாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. குறிப்பாக கடந்த வருடம் அந்நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து காணப்பட்டது.
இக்காலகட்டத்தில் பிரதமர் போரிஸ் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாக அவரது முன்னாள் ஆலோசகர் வெளியிட தகவலானது அந்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பேசப்பட்டபோது, ” மக்களுக்கு போரிஸ் ஜோன்சன் துரோகம் செய்துவிட்டார். விருந்தில் கலந்த சம்பவத்தை பல மாதங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார். அவர் இராஜினாமா செய்ய வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பின்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் குறித்த விருந்துபசார நிகழ்ச்சியை
இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு போரிஸ் விளக்கம் அளித்துள்ள போதும் அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக்கிற்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
41 வயதாகும் ரிஷி சுனாக், பிரிட்டனின் நிதியமைச்சராக பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.