வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கிறது. பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது நினைவுகூரத்தக்கது. பிரிட்டனில், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.