பிறக்கும் போதே அடையாள எண்

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் தேசிய பிறப்புச் சான்றிதழ் திட்டத்தை திங்கட்கிழமை (24) அன்று ஆரம்பித்து வைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அவசியமாகிவிட்ட, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுகள், சட்டப்பூர்வமாக டிஜிட்டல் வடிவத்தில் செய்யப்பட்டால், கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை பெறுவது போன்ற பிற செயல்முறைகளுக்கு இலகுவாக இருக்கும். 

நாடு முழுவதும் 45 மில்லியன் ஆவணங்களை ஸ்கேன் செய்து தரவை உள்ளிடுவதன் மூலம், இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் திட்டம் இப்போது துரிதப்படுத்தப்படுகிறது.

அத்துடன், எதிர்காலத்தில், அனைத்து இலங்கை குழந்தைகளுக்கும் பிறக்கும் போது ஒரு அடையாள எண் வழங்கப்படும். 

குழந்தை தொடர்பான அனைத்து தரவையும் உள்ளடக்கிய ஒரு தரவு அமைப்பு உருவாக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. பின்னர் நாம் ஒழுங்கற்ற செயல்முறைகளைக் குறைக்க முடியும் என்பதுடன், குடிமகன் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது சிங்களம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. 

தாய்மொழி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரே பிறப்புச் சான்றிதழில் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 2021க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு இன்று முதல் தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்க வாய்ப்பு வழங்கப்படும். இப்போது மாவட்ட ஆளுநர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நாடு முழுவதும் தகவல் தெரிவித்து வருகின்றனர். 

அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் குழந்தை பிறக்கும் போது தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பிறப்புகளைப் பதிவு செய்யும் பதிவு அலுவலகம் திம்பிரிகசய பிரதேச செயலகம் என்று கூறலாம்.

மாகாண சபை மற்றும் மாகாண செயலாளர் அலோக பண்டார, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, திம்பிரிகசய பிரதேச செயலாளர் சுதத் சிசிர குமார மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply