”பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” – அனுரகுமார

“இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்றார். 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவினையும் மேற்கோள் காட்டினார்.