சுஹாசினியும் ராதிகாவும் நகமும் சதை போல. ஒருவர் குரல் கொடுத்தால் மற்றவர் அரங்கத்தில் பாய்ந்து விடுவார்.இது அவர்கள் முன்னணி நாயகிகளாக இருந்த போதிலிருந்தே நடப்பது. முன்பு அசிங்கமான பாடல்களை எதிர்க்காததினால் பீப் பாடலையும் எதிர்க்கக் கூடாது என்று சொல்வது அதுவும் பெண்கள் சொல்வது என்ன நியாயம்? இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியுள்ளார்கள். அவர்கள் அப்படி எழுதியிருப்பதால், பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது. திரையுலகின் பாடல்கள் சீர் குலைந்து வருவதை ஜீரணிக்க முடியாத கவி. கா. மு. ஷெரீப் என்ன செய்தார் தெரியுமா? விரசமான, மோசமானப் பாடல்கள் எழுதியவர்களை திட்டவில்லை. விமர்சிக்கவில்லை. “இனி திரைப் படப் பாடல்கள் எழுதமாட்டேன்” என்று பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். பீப் பாடல் பற்றி விமர்சனம் எழுந்த போது, ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதற்கு விளக்கம் சிம்பு தரப்பு தந்ததே தவிர மன்னிப்பு கேட்கவில்லை. தவிர, சிம்பு படஉலகில், படத் தயாரிப்பில் செய்த அலட்டல், அட்டூழியம், அடாவடித்தனம் எல்லாம் பத்திரிகைகள் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. எல்லாம் சேர்ந்து கொண்டது. பொங்கி எழுந்து விட்டார்கள். “எவன்டி உன்னை பெத்தான்.. பெத்தான் ” பாடலுக்கே எல்லாரும் பொங்கியிருக்க வேண்டும்.
(Bismi Parinaaman)