பீலேவின் மறைவானது உலக காற்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கடந்த 1940ஆம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீலே மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் கடந்த 1958ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி பிரேஸில் அணியை முதன் முறையாக வெற்றிக் கனியை சுவைக்க வைத்தார் .
அதே சமயம் காற்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த பீலே, 3 உலகக் கோப்பைகளை பிரேஸிலின் வசமாக்கியவர் ஆவார்.
அந்தவகையில் காற்பந்து உலகில் கொடிகட்டி பறந்த அவர் தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடி77 கோல்களை அடித்துள்ளார் என்பதும் கிளப் அணிகள் உட்பட முதல்தர கால்பந்து போட்டிகளில் சுமார் 1,282 கோல்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பீலேவின் இறுதிச் சடங்கானது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் இன்று(03)நடைபெறும் எனவும் , இதில் பிரேஸின் புதிய ஜனாதிபதி `லுலா டா சில்வா பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.