அங்கு சீர்திருத்தப்பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் இடம்பெறும் சமய சடங்குகளில் பங்கேற்பதற்காக கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதத்தில் சென்ற, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன மஹாவ புகையிரத நிலையத்தில் விசேட சந்திப்பில் கலந்துகொண்டு பயணித்தார்.
இதன்போது ஆரம்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மீள்திருத்தப் பணிகள் தொடர்பாக திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அமைச்சரும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் புகையிரத நிலைய பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யு. பண்டார உட்பட புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு புகையிரத பாதை மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்ட பொறுப்பதிகாரி என பலர் பங்கேற்றனர்.