தோட்ட மக்களை வீதிக்கு இறக்கி ஆயிரம் தான் தமது குறிக்கோள் என வாய்ச்சவடால் விட்டவர்கள் கடைசியா ரூ 730 க்கு கையெழுத்து வைத்துவிட்டு இன்று வெளியேறி இருக்கிறார்கள், திட்டமிடப்படாத போராட்டங்களின் விளைவு இப்படித்தான் இருக்கும், இனி எப்படி இவர்கள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் முன் சென்ற தம்மை உங்கள் தலைவர்கள் என்று சொல்லி திரிவார்கள்? உண்மையில் அடிப்படை சம்பளம் ரூ 500 தான்.
அன்று ( 2013-2015)
அடிப்படைச் சம்பளம் ரூ. 450
வரவுக்கு ஏற்ப கொடுப்பனவு ரூ.140
விலை பகிர்வுக்கான கொடுப்பனவு ரூ. 30
மொத்தம் 620 ரூபா.
இன்று ( 2016-2018)
அடிப்படைச் சம்பளம் ரூ. 500
வரவுக்கு ஏற்ப கொடுப்பனவு ரூ.60
விலை பகிர்வுக்கான கொடுப்பனவு ரூ. 30
உற்பத்தியை அதிகரிப்பதற்கான
கொடுப்பனவு ரூ.140
மொதம் ரூ. 730
(வரதன் கிருஸ்ணா)