தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில், இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டு வருகின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் உட்பட பலர் வெளியேறி இருக்கின்றோம். நாம் இன்று மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டணி வடக்கு – கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும்” எனவும் தெரிவித்தார்.