அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.