நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. டில்லியில் கொரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டமாக நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஒருவாரம் தனிமைப்படுத்தலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
ஆனால் கடந்த சில நாட்களாக டில்லியில் கொரோனா தொற்று மிக மோசமான அளவில் இருந்து வருகிறது. பரிசோதனை அளவை குறைத்தபோதிலும் தொற்றின் வேகம் வீரியமாக இருந்துவருகிறது, அதிலும், ஒக்சிஜன், வென்டிலேட்டர், ஐசியு (ICU)சிகிச்சைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக டில்லியில் பல மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
டில்லியில் கட்டுக்குள் வராத கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேலும் ஒருவாரம் நீடிக்க (மே 2ஆம் திகதி வரை வரை)டில்லி அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் இன்று அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.