பூஜித், ஹேமசிறிக்கு எதிரான விசாரணையைத் தொடர உத்தரவு

ஜெயசுந்தர மற்றும் பெர்னாண்டோவை விடுதலை செய்ய உத்தரவிட்ட மேல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு மேன்முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, குமுதினி விக்கிரமசிங்க, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் சிக்கலான தன்மையையும், தீவிரத்தன்மையையும் கருத்தில் கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தங்கள் வாதத்திற்கு அழைக்காமல் விடுவிப்பது ஏற்புடையதல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியது.

மேல் நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தொடர அடிப்படைகள் இருப்பதாகவும், எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை  அழைக்கவும், மீதமுள்ள விசாரணையைத் தொடரவும்  உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்ற-அட்-பார்க்கு அறிவுறுத்துகிறது.

 2022 பெப்ரவரி 18 அன்று, குற்றப்பத்திரிகைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களை நிறுவுவதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்கள் தவறியதன் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2019 ஏப்ரல் 7ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்க தவறியமை மற்றும் சட்டவிரோதமாக புறக்கணித்தமை தொடர்பில் சட்டமா அதிபர் 855 குற்றச்சாட்டுகளை முன்வைத்து குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். 

Leave a Reply