‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது’ என நாசா அறிவித்துள்ளது.
7 புதிய கோள்கள்:
சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய மைல் கல்:
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.