பெப்ரவரி பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆரம்பத்தில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது நமது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் அதை செய்துள்ளோம். முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.மேலும், வரும் பட்ஜெட்டில், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையை நிச்சயம் உயர்த்துவோம்.

நமது நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை. அதை உருவாக்கும் முக்கிய பொறுப்பு நமக்கு உள்ளது. அரசாங்கத்தின் தலைவர்களாகிய நாம் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். வலிமையான அரசு வேண்டும். பாராளுமன்றத்தில் நாம் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் பண்புகளுடன் பலமாக இருக்க வேண்டும், இந்த நாட்டை படிப்படியாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply