
உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார். நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.