இந்நிலையில், நெருக்கடி சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த போலந்து அரசாங்கம், பிராந்தியத்தில் 12,000 படைகளைத் தரையிறக்கியிருந்தது.
எல்லையை நோக்கி அகதிகளை பெலாரஸ் தள்ளுவதாக பெலாரஸை போலந்து குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மைய மாதங்களில் சட்ட ரீதியற்ற முறையில் பெலாரஸிலிருந்து தமது நாடுகளுக்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக போலந்து, லித்துவேனியா, லத்தீவியா ஆகியன தெரிவித்துள்ளன.
இந்த அகதிகளில் பெரும்பாலோனோர் மத்திய கிழக்கு, ஆசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.