புட்டினின் நெருங்கிய நண்பரான லுகாஷென்கோ “எங்கள் துருப்புக்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லை,” என்று சுட்டிக்காட்டினார்.
அண்மையில் பெலாரஸ் படைகளுடன் கூட்டு பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா நடத்தியது.
இந்த நிலையில், பெலாரஸில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனைத் தாக்கியதாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.