தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பேங்கொக்கில் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பலர் அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இதனால் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர். இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.