ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அதற்கு மாற்று வழியாகவே தமது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க சு.க. தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக நேற்று அறிவித்தது.
இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.