இந்தியாவில் ஏதேனும் உருப்படியாக ஒரு வேலையாவது செய்கிறார்களா?
லஞ்சம் வாங்கியவர்களை பிடித்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை தண்டிக்க சரியான ஒரு சட்டம் இல்லை.!
பல மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லை.!
சுண்டக்கா மாதிரி இருக்கிற இலங்கை நம் மீனவர்களை தூக்கி கொண்டு போவதை தடுக்க திராணி இல்லை.!
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்க தெம்பில்லை.!
ஏதாவது பைஃல் ஆளுநரிடம் சென்றால் அவர் குண்டிக்கு கீழே போட்டு உறங்குகிறார். அதையும் தாண்டி குடியரசுத் தலைவரிடம் சென்றால் அவர் அந்தப் ஃபைலை கையால்கூட தொடுவதில்லை.!
ராஜீவ் கொலை வழக்கை குடியரசுத்தலைவர் ஒழுங்காக டீல் செய்திருந்தால் இந்த ஏழுபேர் கதை எல்லாம் எப்பவோ முடிந்திருக்கும்.!
மேலும் இன்றும் சிலர் MPயாக பதவி வகிப்பவர்களுக்கும், சில போலி சாமியார்களுக்கும் தண்டனை கிடைத்திருக்கும் !
அதையெல்லாம் ஒழுங்காக செய்யாமல் இப்போது எதை எதையோ பிடித்து தொங்கி கொட்டு இருக்கிறார்கள்.!
சரி, தவறு என்று பேசும் நேரம் இது இல்லை. இந்தியச் சட்டப்படி இந்த ஏழுபேரும் நம்ம பிரதமரைக் கொன்ற குற்றவாளிகள் அல்லது துணை சென்றவர்கள்.!
நீதிமன்ற தீர்ப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றாததால்..,
இவர்களை வைத்து தை 16, பங்குனி 17, அமாவாசை 66 என்ற இயக்கங்களை உருவாக்கி நன்றாக பணம் சம்பாதித்து..,
தமிழ்நாட்டில் ஏதேனும் பிரச்சனை வரும் பொழுதோ அல்லது தேர்தல் வரும்பொழுதோ நேராக அறிவாலயத்தை நோக்கி சாணியை வீசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர் இந்த கும்பல்.!
செல்வி. ஜெயலலிதா இவர்களை சாணியில் முக்கிய விளக்கமாற்றால் அடித்தாலும்.., தடா, பொடாவில் உள்ளே வைத்து சுலுக்கெடுத்தாலும் இவர்களுக்கு அவர் ஈழத்தாய்.!
கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் ஈழ தமிழ் மக்கள் மற்றும் இங்கே உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தாலும்…
அவர் கொலைகாரர்.!
இன்னும் கொஞ்சநாள்ல யுவராஜுக்காக ஒரு கும்பல் கிளம்பும்.
அய்யய்யோ கவுண்டர்கள் வாக்குகள் போய்டுமே என்று வழக்கு திசை மாறும்.! இதேமாதிரி அவனும் வெளியில் வருவான்.!
அப்போ அவனப்புடிச்சு …..!
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது அவரோட சேர்த்து வேற 22 பேரும் கொல்லப்பட்டார்கள்.!
பாட்டியை பல குண்டுகளுக்கு இறையாக கொடுத்து பயந்து பயந்து வாழ்ந்த இரண்டு இளைஞர்கள், கொடூரமான முறையில் தந்தையை இழந்து
வாழ்கின்றனர்.!
அவர்களில ஒருவராவது உங்க வீட்டு ஆட்களாக இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்.!
நாங்கள் வகுத்துள்ள இந்த சட்டங்கள் எதிர் காலத்தில் பலனலிக்காமல் போனால்…,
அது இந்தச் சட்டங்களின் தவறாக இருக்காது, மாறாக அதை நடைமுறைப் படுத்துவோரின் தவறாக மட்டுமே இருக்கும்.!
என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் கடைசியில் திரு. அம்பேத்கர் எழுதியுள்ளதை நினைத்துப் பார்க்கிறேன்.!
(சாமான்ய தமிழ் நாட்டுக்காரன்)