எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியெறிந்தமை மற்றும் அதிலிருந்து வெளியேறி எண்ணெய் இரசாயன திரவங்களால், கடல்வாழ் உயிரினங்கள் 200 மரணமடைந்துள்ளன என சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். கப்பலில் ஏற்பட்ட தீயை அடுத்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 176 ஆமைகள், 4 திமிங்கலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இதுவரையிலும் மரணமடைந்துள்ளன.