சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்தார்.
சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்றார்.