தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக் குழு தெரிவித்துள்ளது, அதியுயர் தரம் வாய்ந்த வருமானமீட்டக் கூடிய வகையில் தூர நோக்குடைய நிதிக் கொள்கை ஒன்றைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை பணிப்பாளர்கள் வலியுறுத்தினர்.
தற்போது இலங்கையில் நிலவும் குறைந்த வரிக்கான மொத்த தேசிய உற்பத்தியுடனான விகிதத்தை கவனத்தில் கொண்டு, வருமான வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) ஆகியவற்றை அதிகரிப்பது மற்றும் விலக்களிப்புகளைக் குறைத்து, வருமானத்தை ஈட்டக்கூடிய மீளமைப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியமை தொடர்பில் குறிப்பிடப்பட்டது.
அரச நிறுவனங்களை மீளமைப்பு செய்வது தொடர்பில் அதிகாரத் தரப்பினர்களுக்கு ஊக்கமளித்திருந்ததுடன், செலவு மீட்டலுடனான வலு விலையிடலை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.
பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கு மேலும் முயற்சிகள் அவசியமானவையாக அமைந்துள்ளன.
குறிப்பாக இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைப்பது மற்றும் வியாபார மற்றும் முதலீட்டு சூழலை பொதுவில் மேம்படுத்துவது போன்றன இதில் அடங்கியிருப்பதாக குறிப்பிட்டனர்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை முறையாக திட்டமிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பணிப்பாளர்கள் வலியுறுத்தியதுடன், ஆளுகை மற்றும் மோசடிகளுக்கு எதிராக செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.
காலநிலை மாற்றத்தினால் இலங்கை பாதிப்புகளை எதிர்நோக்கும் நிலையிலிருப்பதை அவர்கள் குறிப்பிட்டிருந்ததுடன், மீட்சியை அதிகரிப்பதற்கான முயற்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.
நிதித் துறையில் தொற்றுப் பரவல் காரணமாக எழுந்திருந்த தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை வரவேற்றிருந்தனர்.
பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வது மற்றும் இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி காணப்படுவதை குறைப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கை அதிகாரத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நாம் பாராட்டுவதாகவும், இதனூடாக தொற்றுப் பரவலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்திருந்தது. பொருளாதார மீட்சி தற்போது இடம்பெற்ற போதிலும், இலங்கை மாபெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.
இதில் பொது கடன் நிலைபேறற்ற மட்டங்களுக்கு உயர்ந்துள்ளன, குறைந்தளவு அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் தேவைப்படும் பாரியளவு நிதித் தேவைகள் போன்றன இதில் அடங்குகின்றன.
இந்தப் பின்புலத்தில், பாரிய பொருளாதார உறுதித் தன்மை மற்றும் கடன் நிலைபேறாண்மையை மீளமைப்பதற்கான சாத்தியக்கூறான மற்றும் ஒரு சீரான தந்திரோபாயத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்ததுடன், முறையாக இலக்கு வைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலைப் பின்னல்களினூடாக இலகுவில் பாதிப்புறக்கூடிய பின்தங்கிய குழுக்களை பாதுகாப்பதுடன், வறுமை நிலையை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டனர்.