பாடசாலைகளில் கல்விச் சுற்றுலாக்கள் இடம்பெறுவது வழமை. குறிப்பாக உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு இரவுப் பொழுது தங்கியிருந்து இரு நாட்கள் சுற்றுலா மேற்கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றது. இதனூடாக, அந்த மாணவர்கள் மத்தியில் சுற்றுலா செல்லும் போது எழும் சவால்களை சமாளித்துக் கொள்ளும் விடயங்கள் பற்றிய அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவ்வாறான சுற்றுலாக்களில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.