இன்றைய போராட்டத்தை முன்னெடுப்போர், எந்த இழுவை படகுகளை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடாமல், போராட்டத்தை மேற்கொள்வது தங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குருநகர் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த மீனவர்கள், குருநகர், வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில், அதிகளவான ரோலர் படகுகளில் சென்றே, மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களை பிரிதிநிதித்துவபடுத்தியே இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினர்.
பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒரு சில மீனவ சங்கங்களின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய குருநகர் மீனவர்கள், இந்த போராட்டத்துக்கு தங்களுடைய எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் கூறினர்.
‘யாருடைய படகினை தடை செய்ய வேண்டும்? இந்திய மீனவர்களின் படகுகளையா அல்லது யாழ். மாவட்டத்தில் ரோலர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகளையா என கேள்வி எழுப்புகிறோம்.
‘இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் மீன்பிடி படகு ஒன்று, நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து முற்றாக சேதமாக்கப்பட்டது. இது தொடர்பில் குரல் எழுப்பாத பாராளுமன்ற உறுப்பினர், எங்களுடைய மீன்பிடி முறைமையை மாற்ற வேண்டும், அவற்றை தடை செய்ய கோரி போராட்டத்தை மேற்கொள்கின்றார்’ எனவும், கருநகர் மீனவர்கள் சாடினர்.
இந்தப் போராட்டம் ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரல் எனத் தெரிவித்த அவர்கள், ‘எங்களுடைய வாழ்வாதாரம் தற்போது இல்லாமல் போய்விட்டது. இந்தியன் இழுவை மடிப் படக்கினால் எங்களுடைய கடல் வளம் அழிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காதவர்கள், இன்று எங்களுக்கெதிராக போராட்டம் மேற்கொள்கின்றனர்’ எனவும் குற்றஞ்சாட்டினர்.