இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மலேஷிய தமிழர் பேரவை அமைப்பினால் திரட்டப்பட்ட நிதி செலவிடப்பட்டமை தொடர்பில் விபரங்களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல அமைப்புக்கள் பெருந்தொகை நிதியைத் திரட்டிவந்துள்ளன. அவ்வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மலேசியாவில் தமிழர் பேரவை மலேஷியா என்ற அமைப்பு பெருந்தொகைப் பணத்தை (1,000,000.00) மலேஷிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது.
இந்தப் பணத்தொகையானது உண்மை யில் எமது மக்களைச் சென்றடையுமானால் நிச்சயம் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குக் கையேந்தும் நிலையோ வறுமையின் உச்சத்தில் தற்கொலைகளுக்கு தூண்டப்படும் துர்ப்பாக்கிய நிலையோ ஏற்பட்டிருக்குமா என்ற ஏக்கம் எங்கள் இதயத் தைப் பிழிகின்றது.
போரின் காயங்கள் இன்னும் மாறாத அவலங்கள் நிறைந்த இந்தச் சூழலில், மன உளைச்சலுடனும், உடல் அங்கங்களை இழந்து வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தமுடியாத வறுமையிலும் வாழுகின்ற மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி எங்கே? மக்களின் பிரதிநிதியாக நாங்களும் வட மாகாணசபையும் இருக்கையில் யார் முலம் இந்த நிதி செலவிடப்பட்டது? அல்லது சேமிப்பில், கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகப் பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எங்களை பொறுத்தவரை மலேசியாவில் இயங்கும் மலேசியத் தமிழர் பேரவை எனும் குறித்த அமைப்பினால் இங்கு எந்தவேலைத்திட்டமும் மக்களை சென்றடைந்ததாக நாம் அறியவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருந்தால் வரவேற்கும் அதேவேளை அது எந்த அடிப்படையில்? எந்த அமைப் பின் ஊடாக செயல்படுத்தப்பட்டது என் பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மக்களுக் குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை அறிய விரும்புகின்றோம்.
மலேஷிய அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக உவந்தளித்த இந்த பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்ட தமிழர் பேரவை மலேஷியா அமைப்பினர் நிச்சயம் இதற்குரிய விளக்கத்தை எமக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அந்த அமைப்பு ஷா ஆலம் எனும் இடத்தில் போரினால் பாதிக்கப்ப ட்ட மக்களுக்காக திரட்டிய சுமார் ஒரு மில்லியன் மலேஷிய ரிங்கட் பணம் என்னவானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகி றோம். அத்துடன் வன்னிப் பிரதேச மக்களுக்காக இந்த அமைப்பு பெற்றுக்கொண்ட நன்கொடைகள் யாவும் என்னவானது?
மக்களின் பிரதிநிதிகளாக நாம் இருக்க மூன்றாம் தரப்பினரைக் கொண்டு ஒரு வேளை இந்தப் பணம் செலவிடப்பட்டிருந்தால் நிச்சயம் இதில் மக்கள் நன்மை அடைந்திருக்க மாட்டார்கள். மேலும், இது வரை மக்களுக்காக அவ்வாறான வேலைத் திட்டங்கள் எதுவும் நடந்ததாக நாம் அறிய வில்லை.
மக்களுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் நிச்சயம் மக்களைச் சென்றடைய வேண்டும். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து பதில ளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.