இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந் நிலையில் உக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளது.
இதையடுத்து உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை.
உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.