ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டுக் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்படும் அபாயம் உள்ளதால் ரஷ்யாவும் உக்ரைனில் உள்ள தங்களது நாட்டு பிரதிநிதிகளை மீண்டும் மாஸ்கோவுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா கூறுகையில் கெய்வ் ஆதிக்கத்தில் உள்ள உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கிற நோக்கத்தில் கிரெம்லின் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.