மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!

தமிழரசுக்கட்சியனை விமர்சித்து கேள்வி எழுப்பும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தடை செய்யவேண்டுமென வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.
இலங்கையினில் வெளியிடப்படும் அனைத்து இணையங்களும் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கும் அவை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்ததுவதற்கு கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் புலம்யெபர் இணைய தளங்களை தொழில்நுடப ரீதியாக தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளைநடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இலங்கை அரசின் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரை கோரியுள்ளார்.
இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.


அவற்றினை தடைசெய்ய காரணமாக அவதூறு செய்திகள்,சந்ததியினை சீரழிக்க கூடிய வெளியீடுகளை அவை வெளியிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் பதவியை கவிழ்த்து ஆட்சி கதிரையேற வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆதரவு கும்பலான ஆனோல்ட் ,சயந்தன்,சுகிர்தன் மற்றும் அஸ்மின் போன்றோர் முன்னெடுத்ம சதி முயற்சிகள் இணைய ஊடககங்களாலேயே அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று அமைச்சர்கள் முதலமைச்சரினை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போதாக மிரட்டியதும் இணைய ஊடகங்களாலேயே அம்பலமாகியிருந்தது.

இந்நிலையினில் புலம்பெயர் இணைய ஊடககங்களை கடுமையாக விமர்சித்து வரும் இக்கும்பல் இலங்கை அரசினூடாக அவற்றினை தடை செய்ய மீண்டும் முயல்வது அம்பலமாகியிருக்கின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில் மகிந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்தினார் நல்லாட்சியில் சீ.வி.கே.சிவஞானத்தின் மூலமாக தேசிய அரசாங்கம் இந்த தடையை முன் நகர்த்தி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிக்கல்களை வெளியிடும் இணைய ஊடகங்களை முடக்கும் பணிகளை ஒப்படைத்துள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள செய்தியில்……
பல கோடி ரூபாய் பணம் முகவர்கள் மூலம் கைமாற ஏற்பாடாகியுள்ளதுடன் இதற்கான பணத்தைப் பெறுவதற்காக சில வட மாகாண சபை உறுப்பினர்கள் கொழும்பு விரைய உள்ளதாகவும் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசு செய்தால் உலகில் உள்ள நற் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்பதால் தமிழர்களை அழிப்பது பிரிப்பது தகர்ப்பது போன்ற வேலைகளை தமிழர்களிடம் ஒப்படைப்பதில் ரணில் அரசு மிக மிக சிறந்தது அந்த வகையில் தமிழர் ஊடகங்களை அடக்கும் பணி சீ.வி.கேயிடம் இது தான் இலங்கை அரசின் வெற்றி.