அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 59), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 78) போட்டியிடுகின்றனர்.
அவர்கள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாள்களுக்கு முன்பு இரு வேட்பாளர்களும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன்படி, ஒக்டோபர் 11ஆம் திகதி நிலவரப்படி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 46 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 48.5 சதவீத ஆதரவுடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 2.5 சதவீத அதிகரிப்புடன், வாக்குச் சாவடியில் முன்னிலையில் உள்ளார்.
‘270toWin’ என்ற இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பு படி, சராசரி, 49.3 சதவீத ஆதரவுடன் ஹாரிஸ் மீண்டும் ஓரளவு முன்னிலையில் காட்டுகிறது. அதேசமயம், டிரம்புக்கான ஆதரவு 46.5 சதவீதமாக உள்ளது.