மக்கள் மீதான அநியாய வற் (VAT) வரித் திணிப்பு, தமிழர்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கவில்லை போலும். அதியுயர் பதவிகளில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், இதற்கெதிராக வாய் திறக்காமல் இருப்பது, நிச்சயமாக ஒரு வரலாற்றுத் தவறாக அமையப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின், பொருளாதாரப் பிரச்சனை தொடர்பான அசமந்தப் போக்கு. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாக விளங்கும் முஸ்லிம், தமிழ் மக்களின் அமைதி நிலை, ஆட்சியாளர்களுக்கு மிகுந்த சாதகமான நிலைமையாக மாறிக்கொண்டு இருக்கின்றது. இனப் பிரச்சனையைக் காரணங் காட்டி, பொருளாதாரப் பிரச்சனை மறைக்கப்படுவது, தொன்று தொட்டு நிகழும் விடயங்களில் ஒன்று. இதனால் ஒருபோதும் அரசியால்வாதிகள் பாதிக்கப்படவுமில்லை, பாதிக்கப்படப் போவதுமில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் சொகுசுகளை அனுபவித்தவர்களாக அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இனியும், தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில், மௌனிகளாக இருக்க முடியாது. இந்த மௌனம் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
(Arun Hemachandra)