மண் அகழ்வும், மரம் கடத்தலும்….

பழையமுறிகண்டியில் மணல் அகழ்வு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், துணுக்காய் பிரதேச செயலகம் என்பவற்றில் கடந்த 13 ஆண்டுகளாக முறைப்பாடுகள் செய்தும் மணல் அகழ்வு தடுக்கப்படவில்லை. கிராமத்தை பாராளுமன்ற உறுப்பினர்களும் 13 ஆண்டுகளில் வந்து பார்வையிடவில்லை.

பழையமுறிகண்டி கிராமத்தில் இருந்து புத்துவெட்டுவான், கொக்காவில் வழியாக டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கு, புத்துவெட்டுவான் கிராம அலுவலர் பிரிவில் கொக்காவில் எல்லைப் பகுதியில் பொலிஸ், இராணுவம் இணைந்த காவல் அரண் அமைக்கப்படவில்லை. இவை எல்லாம் புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி கிராமங்களில் இருந்து மணல், மரங்கள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு வசதியாக உள்ளன.

பழையமுறிகண்டியில் தொடரும் மணல் அகழ்வு காரணமாக, கிராமத்தின் குளத்தின் அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கிராமத்துக்கு நேரடியாக வருகை தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் மணல் அகழ்வால் பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், கொக்காவில் வீதி பெரும்
சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.