மட்டக்களப்பு நாவற்குடாவினை பிறப்பிடமாகக்கொண்டு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்புமத்திய வங்கியின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. இளயதம்பி தங்கராஜா அவர்கள் கனடாரொரன்ரோவில் இன்று (22-8-2017) காலமானார்.
திருமதி.சொர்ணம்மாவின் பாசமிகு கணவரும் வைத்தியகலாநிதி. சொர்ணராஜா (சொணையன்)-நயகராபொதுவைத்தியசாலை, தனயராஜன், வைத்தியகலாநிதி. லகுணராஜன், அயனராஜன் ஆகியோரின் தந்தையும் வசுமதி(வூட்டி),ஆனந்தி, சுனிலாவின் மாமனாரும் ஆவார்.
இவர், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளிநாயகி, செல்லமாணிக்கம், தர்மலிங்கம் (ஆசிரியர்),சிவசுப்பிரமணியம், நடராஜா,மற்றும் செபராஜா ஆகியயோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
கொழும்பில் பலகாலம் வாழ்ந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழந்தவர். மட்டக்களப்பு மண்ணை என்றும்நேசித்த தங்கராஜா ஐயா அவர்கள் ஒருசிறந்த கலைஞனும் ஆவார். கிராமியப்பாடல்ளை தத்துரூபமாக பாடும் அவர்மாமாங்கேஸ்வரர் வரலாறு, நான் என் அம்மாவின் பிள்ளை என்னும் இரண்டு சிறந்த நூல்களையும் எழுதிவெளியிட்டுள்ளார்.தனது மூன்றாவது நூலினை எழுதிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சுகயீனம் அதனை இடைநடுவில்தடுத்துவிட்டது.
2001-10-7 ந்திகதியன்று கலாநிதி செல்வராஜகோபால் அவர்களின் இலக்கியகலாநிதி பட்டமளிப்பினைப் பாராட்டி நாம் எடுத்தபெருவிழாவில் கனடாவில் மேடையில் முதல்முதலாக ஒரு நாட்டார் பாடலை பாடி பலரின் கைதட்டலைப் பெற்றவர்.இனிமையான குரல்வளம் கொண்ட அவரை பின்னர் ஒருகவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றக்காரணமாயிருந்ததுஅந்தமேடைதான் என்றால் மிகையாகாது.
கனடாவில் கிழக்கிலங்கைச் சமூகத்தினுடன் மிகவும் இறுக்கமான உறவைப்பேணியதுடன் இங்குள்ள பல சங்கங்களின்உறுப்பினராகவும் கனடா சுவாமிவிபுலாநந்தர் கலைமன்றம் மற்றும் சிவாநந்தா பழையமாணவர் சங்கத்தின் ஆயுட்காலபோசகராகவும் கடமையாற்றியவர்.
தன் மனைவியுடன் எந்த விழாக்களிலும் ஒன்றுகூடலிலும் தோழிலே புகைப்பட கருவியுடனும் கையில் ஒருபுத்தகத்துடனும்காணப்படும் ஐயா அவர்களை தெரியாதவர்கள் ஒரு ஊடகவியலாளர் என்றே எண்ணுவார்கள். உண்மையில் அவர் ஒருஊடகவியலாளரேதான். எமதுசமூகத்தினதும் நமது நிகழ்வுகளையும் மிகவும் கச்சிதமாக நம்கண்முன் கொண்டுநிறுத்துவதுடன் காலவோட்டத்திற்கேற்ப ஒரு நினைவுப்பெட்டமாக நமது மண்ணின் வரலாற்றையும் தமிழுலகத்திற்குபதிவுசெய்தவர்.
ஆங்கிலம் தமிழ் சிங்களம் ஆகிய மூன்றுமொழிகளிலும் புலமை பெற்ற திரு.தங்கராஜா ஐயா அவர்கள் பழகுவதற்கு மிகவும்இனியவர். என்றும் தன்மனைவியுடன் இணைபிரியாது வாழ்ந்தவர். கிழக்குமக்களின் இயல்பான விருந்தோம்பலை விடதிரு.திருமதி. தங்கராஜா சொர்ணம்மா அவர்களின் உபசரிக்கும் பண்பு மிகவிசேடமானது. அதிலும், ஒருபடி மேலானது. உள்ளத்திலிருந்து வரும் அவர்களின் உண்மையான அன்புடன் சிரிப்பும் கலந்து அந்த உபசரிப்பு பன்மடங்கு சுவையானதாகமாறிவிடும். என்றும் நம்நினைவுகளில் அது மறையாது நிற்கும்.
கனடாவில் கலாநிதி செல்வராஜகோபால் அவர்களின் வழிநடத்தலில் கிழக்கு மண்ணைப்பற்றியும் கிராமிய பாடல்களையும்பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர். அமரர் வித்துவான் செபரெத்தினம், வித்துவான் ஞானரெத்தினம், கலாநிதி இ.பாலசுந்தரம்,திரு.சிவபாலு, அமரர் அறிஞர் கனகசபாபதி, கவிஞர் கந்தவனம்; ஆகியோருடன் இலக்கியம் சம்பந்தமானஉறவைப்பேணிவந்தவர்.
கனடாவில் வாழும் தமிழர்களுடன் அன்புடன் பழகும் தங்கராஜா அவர்கள் தமிழர்களால் நடத்தப்படும் நிகழ்வுகளிலும்அவர்களின் இன்பம் துன்பத்திலும் தவறாது பங்குகொண்டவர்.
கிழக்குமக்களோடு மிகஅந்யோன்னியமாக பழகி கிழக்கு மண்வாசனையையே உயிராக்கொண்டு வாழ்ந்த ஒரு உன்னதமானமனிதன் தங்கராஜா அவர்கள். இன்று அவர் நம்மைவிட்டு பிரிந்தது மிகவும் மனவேதனையைத்தருகின்றது.
அவரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்றும் நன்றியுடன், அஜந்தா ஞானமுத்து குடும்பத்தினர்.